எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் : தள்ளுபடி கோரிக்கையை நிராகரித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்


 

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடுகோரி இலங்கை அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனத்தின் காப்பீட்டு முகவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையை சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
 
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் மற்றும் அக்கப்பல் மூழ்கியதன் காரணமாக இலங்கைக் கடற்பிராந்தியத்துக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு வழங்க பிரித்தானிய நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியிருப்பதாகவும், எனவே இவ்வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் எனவும் கப்பல் நிறுவன காப்பீட்டு முகவர்கள் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
 
இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யுமாறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டதுடன், அதற்கு எதிர்வரும் 24 ஆம் திகதிவரை கால அவகாசம் அளித்துள்ளது.
 
அதன்படி இவ்வழக்கு எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.