பண மோகத்தால் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் கொலைகள்!

நாட்டில் அண்மைய தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் பெரும்பாலானவை கூலிக்கு அமர்த்தப்பட்ட ஒப்பந்தக் கொலையாளிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடும் துப்பாக்கிதாரிகளுக்கு பாதிக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் காவல்துறை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

குறித்த ஒப்பந்தக் கொலையாளிகள் அதிகளவில் போதைக்கு அடியாகியுள்ளதாகவும் போதைப்பொருட்களுக்கு பணம் செலுத்துவதற்காக இவ்வாறு துப்பாக்கிச் சூடுகளை மேற்கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமை

அதன்படி, இவ்வாறு மேற்கொள்ளப்படும் கொலைகளுக்கு நான்கு தொடக்கம் ஐந்து இலட்சம் ரூபாய் வரை கோரப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பணத்திற்கு பதிலாக பல இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களும் சில சந்தர்ப்பங்களில் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் துப்பாக்கிச் கூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் காவல்துறை மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.