இராணுவ தளபதிக்கு எதிரான நீதிமன்ற மனு குறித்து வெளியான அறிவிப்பு


முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரட்ன உட்பட்டவர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நீதிபேராணை மனு திரும்பப்பெறப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறையைத் தடுக்கத் தவறியமைக்கு எதிராகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனுவானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 22 அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாகவே தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில், முழுமையான விசாரணைகள் நடத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் டிரான் அலஸ், அளித்த உறுதிமொழிக்கு அமையவே இந்த மனு திரும்பப்பெறப்பட்டுள்ளது.

இதன்படி மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, மனுவை மீளப்பெற நீதிமன்றத்தின் அனுமதியை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.