சிங்கப்பூருக்கு தப்பியோடிய அர்ஜுன மகேந்திரனின் வெளியான புதிய புகைப்படத்தால் பரபரப்பு : என்ன செய்ய போகின்றார் ஜனாதிபதி அநுர

?

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் சமீபத்திய புகைப்படத்தை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

தற்போது சிங்கப்பூரில் வசிக்கும் மகேந்திரன், சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தன்னைத் தொடர்பு கொண்டு புகைப்படத்தைப் பகிரங்கமாகப் பகிர அனுமதி அளித்ததாக அந்தப் பத்திரிகையாளர் கூறினார்.

2015-ஆம் ஆண்டு மகேந்திரன் மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார். இது அரசுக்கு கணிசமான நிதி இழப்பை ஏற்படுத்தியது.

அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் மத்திய வங்கி ஆளுநராக முதன்முதலில் நியமிக்கப்பட்ட மகேந்திரன் நாட்டை விட்டு வெளியேறியபோது,

திருமணத்தில் கலந்து கொள்ள சிங்கப்பூர் சென்றுள்ளதாகவும், விரைவில் திரும்பி வருவார் என்றும் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார். ஆனால், அதன் பின்னர் அவர் நாடு திரும்பவில்லை.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜனாதிபதி அனுர குமாரதிசாநாயக்க, சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள மகேந்திரனை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவதாக உறுதியளித்தார்.

இலங்கை அரசு அவரை மீண்டும் அழைத்து வர முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், சிங்கப்பூர் ஒப்படைப்பு கோரிக்கையை நிராகரித்ததால், மகேந்திரன் நாடு திரும்பவில்லை.

இந்த மோசடி வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா.அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் மற்றும் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா.அதிபர் நிஷாந்த சில்வாவின் மேற்பார்வையில் கொழும்பு குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையிலேயே முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் சமீபத்திய புகைப்படத்தை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டு அது வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.