அப்பிள் ஐபோன் 12 இனை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

ஐபோன் 12 இன் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு பிரான்ஸ் நாடு கோரிக்கை விடுத்துள்ளது.

ஐபோன் 12 இன் கதிரியக்க தொழிற்பாடு அதன் எல்லை அளவை தாண்டி இயங்குவதாகவும் அதனால் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரான்ஸின் இந்த கோரிக்கையினைத் தொடர்ந்து ஐபோன் 12 தொடர்பான அபாயங்களை மதிப்பாய்வு செய்யவுள்ளதாக பெல்ஜியமும் நேற்றைய தினம் (14) அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் முழுவதும் இந்த தடை உத்தரவினை நடைமுறைப்படுத்துவதற்கு உடனடியான வாய்ப்புக்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது

ஏனெனில் ஐரோப்பிய எந்தவொரு முடிவினையும் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கருத்துக்களையும் ஆராயும் என்பதனால் இந்த தீர்மானமும் அதன் படியே நடைபெறும் என்று நம்பப்படுகிறது.

கடந்த ஆண்டு முதல் ஐபோனின் விற்பனையின் தரப்படுத்தலில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தினை ஐரோப்பிய நாடுகள் பிடித்திருந்தாக கூறப்படுகிறது.

கடந்த செவ்வாயன்று (12) அப்பிள் நிறுவனம் தனது புதிய உற்பத்தியான ஐபோன் 15 இனை அறிமுகப்படுத்தியிருந்தது இந்நிலையில் ஐபோன் 12 தொடர்பாக வெளியாகியுள்ள விடயம் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

தொழிற்பாடு கதிரியக்கம் போன்ற அனைத்து சோதனைகளுக்கும் உற்படுத்தப்பட்டே ஐபோன் 12 வெளியிடப்பட்டதாகவும், 2020 ஆம் ஆண்டு வெளியான இந்த ஐபோன் 12 இன் உற்பத்தியினை நிறுத்துவது அப்பிள் நிறுவனத்திற்கு பெரிய பாதிப்பினை ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது.

இருந்த போதிலும் இது தொடர்பான ஆய்வுகளை மீளவும் நடத்தவுள்ளதாக பெல்ஜியம் கூறியுள்ளது.