பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் இந்த மோதல்களில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தைத் தணிப்பதற்காக தோஹாவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, அமைதி முயற்சிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் வீரர்கள் பாகிஸ்தான் எல்லையில் உள்ள கிழக்கு பக்திகா மாகாணத்தில் உள்ள உர்குனிலிருந்து ஷரானாவுக்கு பயணித்த போதே சம்பவம் இடம்பெற்றதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆட்சியால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் என்று விபரித்துள்ளது.
தாக்குதலின் போது கபீர் (Kabeer), சிப்கத்துல்லா (Sibghatullah) மற்றும் ஹாரூன் (Haroon) ஆகிய வீரர்கள் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதனையடுத்து, அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் ரஷித் கான் (Rashid Khan) இந்த முடிவை வரவேற்று, "இந்த சம்பவம் ஆப்கானிஸ்தானின் தேசிய கௌரவத்தை முன்னிறுத்தி நிற்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த அடக்குமுறையாளர்களால் அப்பாவி பொதுமக்களும், எங்களது உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களும் பகொலை செய்யப்பட்டது, ஒரு கொடூரமான, மன்னிக்க முடியாத குற்றம் என்று ஃபஸல்ஹக் ஃபரூக்கி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) இதுவரை இந்த விவகாரத்தில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.