நிலந்த ஜயவர்தனவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கடந்த 6 வருடங்களாக நாம் மூன்று அரசாங்கங்களிடம் 'கோரிக்கை விடுத்து வந்தோம். ஆனால் எமது அந்தக் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன. தற்போது அவர் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் நாம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கத்தோலிக்க சபையின் மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜீட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
மேலும் நிலந்த ஜயவர்தனவிடம் முறையாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதேபோன்று முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரி கோட்டா மற்றும் ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தை அறிந்து கொள்ள முடி யும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,
நிலந்த ஜயவர்தனவே உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர். அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கடந்த 6 வருடங்களாக நாம் கோரிக்கை விடுத்து வந்தோம்.
இந்தக் கோரிக்கையை நாம் மூன்று அரசாங்கங்களிடம் முன்வைத்தோம். ஆனால் எமது அந்தக் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன. இன்று எமது கோரிக்கை நிறைவேற் றப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை நாம் மூன்று அரசாங்கங்களிடம் முன்வைத்தோம். ஆனால் எமது அந்தக் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன. இன்று எமது கோரிக்கை நிறைவேற் றப்பட்டுள்ளது.
அவரை சேவையிலிருந்து நீக்கியமைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நாம் நன்றியைத் தெரிவித் துக்கொள்கிறோம்.
நிலந்த ஜயவர்தனவை கைது செய்து முறையான விசாரணைகளை முன்னெடுத்து அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினால் பல உண்மைகளைக் கண்டறிய முடியும்.
உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னதாகவே அறிந்திருந்தாரா? அவர் ஏன் சிங்கப்பூருக்கு சென்றார்? யாரின் தேவை நிமித்தம் அங்கு சென்றார் என்பதை இதன் மூலமாக அறிந்துகொள்ள முடியும்.
மேலும் தேசிய உளவுச்சேவையின் பிரதானி ஒருவர் புலனாய்வுத் தகவல் கிடைக்கப் பெற்றிருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் உதாசீனம் செய்தமை என்பது பாரதூரமான விடயமாகும்.
இந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மரணதண்டனை வழங்க வேண்டும் என்பதே எனது நிலைப் பாடாகும்.
நாம் ஜனாதிபதி அநுரவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைக்கிறோம். முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன கோட்டாபய ராஜபக் ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்துக்கு அழைத்து வாருங்கள். இதன் மூலமாக தாக்கு தலின் பின்புலத்தைக் கண்டறிய முடியும் என்றார்.