இலங்கை மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் அபாயம் என எச்சரிக்கை

வேலை நிறுத்தம் நிறுத்தப்படாவிட்டால் நாடு மீண்டும் வரிசையில் நிற்கும் யுகத்திற்கு செல்லும் அபாயம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

 ஐக்கிய தேசியக் கட்சியின் பொலன்னறு மாவட்ட மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர்,

 விவசாயிகள், தனியார் துறையில் பணிபுரிபவர்கள், உழைத்துச் சம்பாதித்த பணத்தில், பொதுத்துறையில் உள்ள அனைவருக்கும் சம்பளம் கொடுக்கின்றனர்.

அரச துறையில் இருப்பவர்கள் விவசாயிகளுக்காகவும், தனியார் நிறுவனங்களுக்காகவும் செயல்பட வேண்டிய கடமை உள்ளது.

மேலும் வங்குரோத்து நாட்டில் நடக்கும் வேலைநிறுத்தங்களை உலகம் முழுவதும் ஊடகங்கள் காட்டும் போது, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைகிறது.

தற்போது இப்பகுதியிலும் சுற்றுலா பரவியுள்ளது. ஹோட்டல்கள் இன்று வெளிநாட்டினரால் நிரம்பி வழிகின்றன.

வெளிநாட்டினரின் வருகை குறைந்தால், திவாலான நாடு மீண்டும் எண்ணெய், எரிவாயு, மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கு வரிசை கட்டும் சமுதாயமாக மாறும்” எனத் தெரிவித்துள்ளார்