வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்டுள்ளார்.
2-3 நாட்களுக்குள் கைது
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எதிர்வரும் 2-3 நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி அஞ்சலி
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர நேற்று (22) தனது உத்தியோகபூர்வ அறையில் இருந்தபோது சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து, சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற நிலையில் அவர்களை கைது செய்வதற்காக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமசேகரவின் உடல் தற்போது இறுதி அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.