வாகன இறக்குமதி : மகிழ்ச்சி செய்தியை வெளியிட்ட அரசாங்கம்


இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீதான சில முக்கிய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கடந்த ஏப்ரல் 29ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்துள்ளதாகவும், இலங்கை நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல், நிதி, பொருளாதார மேலாண்மை மற்றும் அபிவிருத்தி அமைச்சர் மற்றும் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், முன்பு இறக்குமதி செய்யப்பட்டு, ஆனால் ஏதேனும் காரணங்களால் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஹைபிரிட் வகை மோட்டார் வாகனங்களை தற்போது விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


முந்தைய மாதம் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களாக இந்த வாகனங்களை எங்களால் விடுவிக்க முடியவில்லை என இலங்கை வாகன இறக்குமதி சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

புதிய வர்த்தமானி காரணமாக ர்லடிசனை வுழலழவய சுயணைந மற்றும் ர்லடிசனை Nளைளயn ஓ-வுசுயுஐடு போன்ற வாகனங்களை இப்போது துறைமுகத்திலிருந்து விடுவிக்க முடிவதாகத் தெரிவித்துள்ளார்.

இதே போன்று இத்தகைய தொழில்நுட்பத்தில் உருவாகும் பிற வாகனங்களுக்கும் இப்போதோடு வெளியேற்ற அனுமதி கிடைத்துள்ளது.

இதற்கிடையில், பதிவு செய்யப்படாத புதிய மோட்டார்சைக்கிள் வகை வாகனங்களை இறக்குமதிசெய்வதற்கான தடை தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இறக்குமதி உரிமம் பெற்றவர்களால் புதிய மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதிசெய்ய அனுமதிக்கும் புதிய வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று புத்தம் புதிய மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நாயகத்திடமிருந்து அனுமதி பெறப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.