பாதாளக்குழுத் தலைவர் லொக்கு பெட்டி நாளை இலங்கைக்கு


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான சுஜீவ ருவன் குமார டி சில்வா எனும் லொக்கு பெட்டி நாளை நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லொக்கு பெட்டி கடந்த வருடம் பெலாரஸ் இராச்சியத்தின் பாதுகாப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் லொக்கு பெட்டி கைது செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த விடயம் உண்மைக்குப் புறம்பானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பெலாரஸில் கைது செய்யப்பட்டுள்ள லொக்கு பெட்டியை நாட்டுக்கு அழைத்து வர குற்றப்புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று பெலாரஸ்ஸ{க்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.