ஐ.நா. சபையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவருடைய மனைவிக்கு நேர்ந்த அவமரியாதையான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று நடந்த ஒரு சிறிய தவறான சம்பவம், பெரும் அரசியல் விவாதமாக மாறியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப், ஐ.நா. மன்ற வளாகத்தில் உள்ள எஸ்கலேட்டர் எனப்படும் அசையும் படிக்கட்டுக்களில் ஏறியபோது, அது திடீரென நின்றது.
இந்த சம்பவம் வெள்ளை மாளிகையின் கோபத்தை கிளப்பியுள்ள்ளது.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் வெளியிட்டுள்ள பதிவில், இது ஒரு சாதாரண தொழில்நுட்ப கோளாறு அல்ல, யாராவது திட்டமிட்டு எஸ்கலேட்டரை நிறுத்தியிருக்கலாம் "இது திட்டமிட்ட செயல் என்றால், அந்த ஊழியர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்" என அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பின்னால், ஐ.நா. ஊழியர்கள் முன்பே ட்ரம்ப் வரும்போது எஸ்கலேட்டர், எலிவேட்டர் ஆகியவற்றை நிறுத்தி "பணம் முடிந்துவிட்டது" எனக் கூறுவோம் என நகைச்சுவையாக பேசியதாக ஒரு செய்தி வெளியானது.
இதனால், வெள்ளை மாளிகை மேலும் கடுமையாக பதிலளித்துள்ளது.
மேலும், ட்ரம்ப் தனது பொதுக்கூட்ட உரையை தொடங்கும்போது, டெலிப்ரோம்ப்டர் செயலிழந்தது. "இதை இயக்கும் நபர் பாரிய சிக்கலில் பிரச்சினையில் இருக்கிறார்" என அவர் கூறினார்.
இந்த இரண்டு பிரச்சினைகளையும் ஐ.நா. அமைப்பின் செயல்திறன் குறைவாக காணப்படுகின்றது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இது ஒரு பாதுகாப்பு முறை செயற்பாட்டால்தான் எஸ்கலேட்டர் நின்றது என்றும், டெலிப்ரோம்ப்டர் வெள்ளை மாளிகை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதில் கருத்து இல்லை என்றும் ஐ,நா. தரப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.