ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை உக்ரேனால் திரும்ப மீட்க முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .
ஐ.நா. பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் பங்கற்க வந்திருந்த உக்ரேன் ஜனாதிபதி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து, சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே டொனால்ட் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்
ரஷ்யாவுடன் போராடி அந்த நாட்டிடம் இழந்த பகுதிகளையெல்லாம் மீட்கும் நிலையில்தான் உக்ரைன் இருக்கின்றது.
ஐரோப்பிய யூனியனின் உதவியுடன் உக்ரேன் இந்த வெற்றிவாகையைச் சூடும்.
நேரம், பொறுமை மற்றும் ஐரோப்பிய நாடுகளின் குறிப்பாக நேட்டோவின் ஆதரவு ஆகியவற்றின் உதவியுடன் இந்தப் போர் தொடங்கியதற்கு முன்பிருந்த எல்லைகளை உக்ரேனால் மீண்டும் அடைய முடியும்.
ஒரு இலக்கே இல்லாமல் இந்தப் போரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொடங்கியுள்ளார்.
ஓர் உண்மையான இராணுவ சக்தி தலையிட்டால் இந்தப் போர் சில வாரங்களில் முடிந்துவிடும், தற்போது புடினும் மற்றும் ரஷ்யாவும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க உக்ரேனுக்கு இதுவே சரியான தருணம்.
இந்தப் போரில் உக்ரேனுக்கு அமெரிக்கா முழு ஆதரவையும் வழங்கும், நேட்டோ வழியாக உக்ரேனுக்குத் தேவையான ஆயுதங்களை அமெரிக்கா தொடர்ந்து விநியோகிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் இந்தியா எப்போதும் உக்ரைனின் பக்கம் இருக்கின்றது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,, “இந்தியா எப்போதும் உக்ரைனின் பக்கம் இருக்கின்றது.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர சீனா விரும்புவதாக நான் நினைக்கவில்லை.
அதேநேரத்தில் டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதியின் அணுகுமுறையை மாற்ற முடியும் என்று நாம் நினைக்கின்றோம்.
ஐரோப்பியர்கள் இந்தியர்களுடன் நெருக்கமாக இருந்து வருகின்றனர்.
ரஷ்ய எரிசக்தித்துறை குறித்த தனது அணுகுமுறையை இந்தியா மாற்றிக்கொள்ளும் என்பது எனக்கு தெரியும்.
சீனாவிடம் இருந்து இதே போன்ற நிலைப்பாட்டை எதிர்ப்பார்க்க முடியாது, சீனாவை பொறுத்தவரை இது மிகவும் கடினம்” என அவர் தெரிவித்துள்ளார்.