ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் தலைமையகம் மீது உக்ரேன் அதிரடி தாக்குதல் : கதிகலங்கிய பாதுகாப்பு தரப்பு

ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் தலைமையகம் மீது உக்ரேன் ஏவுகணைத் நேற்று(22) தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரேனுக்கு அமெரிக்கா புதிய பாதுகாப்பு நிதியுதவியை அறிவித்த நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இத்தாக்குதலை கிரிமியாவின் செவஸ்டோபோல் நகர ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதல் கிரிமிய தீபகற்பத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான செவஸ்டோபோல் கடந்த 2014 இல் ரஷ்யாவால் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட நிலையில் அங்குள்ள கப்பற்படையின் தலைமையகம் மீது நடத்தப்பட்டுள்ளது.

ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து அதன் சிதைவுகள் நூற்றுக்கணக்கான மீட்டர்களுக்கு சிதறிக்கிடந்ததை ரஷ்ய அரச ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளதையடுத்து, தாக்குதல் நடந்த இடத்திற்கு ஏராளமான நோயாளர் காவுவண்டிகள் சென்றிருப்பதால் ரஷ்ய தரப்புக்கு கடும் இழப்புகள் ஏற்பட்டிருகக்கலாமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அத்தோடு தொடர்ந்தும் உக்ரைனிய தாக்குதல் நடக்கலாமென எச்சரித்த ஆளுநர் மக்கள் நகர மையத்தை தவிர்க்கவேண்டும் எனவும் வதிவிடங்களை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை ரஷிய படையெடுப்பிற்குப் பிறகு முதல் முறையாக கனடா சென்றுள்ள ஜெலன்ஸ்கியை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விமான நிலையத்தில் வரவேற்றார்.

இந்நிலையில் , அந்நாட்டின் பாராளுமன்றத்தில் உரையாற்றில் உரையாற்றி உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி

 "ரஷியாவின் ஆக்கிரமிப்பு நமது வெற்றியின் மூலம் முடிவுக்கு வர வேண்டும். உக்ரைனில் மீண்டும் ஒரு இனப்படுகொலையை நிகழ்த்த முயற்சி செய்யாத வகையில் ரஷியா நிரந்தரமாக தோற்கடிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் உக்ரேனுக்கு கனடா அரசு அடுத்த வருடமும் தொடர்ந்து பொருளாதார உதவிகளை வழங்கும் என்று கனடா பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடோ இதன் போது உறுதியளித்தார்.