பொதுமன்னிப்புக் காலத்தின் இறுதியில், மேலதிக வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக் தமக்கு உள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள அல்லது வதிகின்ற ஆளொருவரினால் உடமையில் வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயத் தொகையை 15,000 டொலரிலிருந்து 10,000 டொலர் அல்லது வேறு வெளிநாட்டு நாணயங்களில் அதற்குச் சமனான தொகைக்குக் குறைத்தல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு கடந்த 16 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
குறித்த தொகைக்கு மேலதிகமான வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்ற, இலங்கையிலுள்ள அல்லது வதிகின்ற ஆட்களுக்காக கடந்த 16ஆம் திகதி முதல் செயற்படத்தக்கவாறு 14 வேலை நாட்களைக்கொண்ட பொதுமன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியின் இறுதியில் மேலதிக வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்ற ஆட்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் எடுப்பதற்காண உரிமை தங்களிடம் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            