பப்புவா நியூ கினியாவில் கொடூரம் : நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

பப்புவா நியூ கினியாவில் இன்று பாரிய நிலச்சரிவொன்று ஏற்பட்டுள்ள நிலையில், இதில் சிக்குண்டு சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.


தென் பசிபிக் தீவு நாடான பப்புவா நியு கினியாவின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எங்கா மாகாணத்தின் காகலம் எனும் கிராமத்திலேயே இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 100 இற்க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

நிலச்சரிவில் சிக்குண்டு பலர் காணாமற் போயுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நிலச்சரிவில் புதையுண்டுள்ள உடல்களை உள்ளூர்வாசிகள் மீட்டெடுக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

தற்போது அங்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன