கெடு விதித்த ட்ரம்ப்.. ஹமாஸ் சொல்வது என்ன?


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காஸா திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அரபு மற்றும் முஸ்லிம் தேசியத் தலைவர்களிடமிருந்து ஹமாஸ{க்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஹமாஸ் தனது வீரர்களின் உயிருக்கு சர்வதேச உத்தரவாதங்களை நாடுவதாகவும், காஸா மற்றும் மேற்குக் கரை அல்லது உலகளவில் அதன் உறுப்பினர்கள் கொல்லப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இருவரிடமிருந்தும் விரும்புவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 
காஸா மற்றும் மேற்குக் கரையின் பிராந்திய எல்லைகளில் எந்த மாற்றங்களும் இருக்கக்கூடாது என்றும் அக்குழு வலியுறுத்துகிறது.
 
மேலும் புதிய பாலஸ்தீன அரசின் தலைநகராக கிழக்கு ஜெருசலேமைக் கோரியுள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
மேலும், ஹமாஸ் போராளிக்குழு தனது இராணுவப் பங்கை கைவிட ஒப்புக்கொள்ள இருப்பதாகவும், ஆனால் முன்மொழியப்பட்ட பாலஸ்தீன அரசில், தனது அரசியல் அலுவலகங்களை நிறுவ விரும்புகிறது என்றும், தனது ஆயுதமற்ற போராளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு காஸா மற்றும் லெபனான், எகிப்து, ஜோர்தான், சிரியா, துருக்கி உள்ளிட்ட பிற முஸ்லிம் நாடுகளில் தங்குமிடம் வழங்க வேண்டும் என்றும் அது கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.