குருநாகலில் இன்று பரபரப்பு : செவ்வந்தி உருவத்தில் அரச நிறுவனத்துக்குள் நுழைந்த பெண், பொலிஸார் அதிரடி நடவடிக்கை


நீதிமன்றினுள் வைத்து கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியை போன்று தோற்றமுடைய மற்றுமொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருணாகல், குளியாப்பிட்டி பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குளியாப்பிட்டி காணி பதிவு அலுவலகத்திற்கு வந்த பெண், செவ்வந்தி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இஷாரா செவ்வந்தியை போன்ற உருவமைப்பு கொண்ட பெண்கள் அனுராதபுரம் மற்றும் மத்துகம பகுதிகளில் வைத்து ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.