பெருவின் முதல் பெண் ஜனாதிபதியாக டினா பொலுவார்டே பதவியேற்பு!

நீண்ட சர்ச்சைக்கு பிறகு பெருவின் முதல் பெண் ஜனாதிபதியாக 60 வயதான டினா பொலுவார்டே பதவியேற்றுள்ளார்.காங்கிரஸை சட்டவிரோதமாக மூட முயற்சித்ததைத் தொடர்ந்து இடதுசாரித் தலைவர் பெட்ரோ காஸ்டிலோ பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் பதவியேற்றார்.

நேற்று (புதன்கிழமை) பிற்பகல் எதிர்க்கட்சித் தலைமையிலான சட்டமன்றம் காஸ்டிலோவை அகற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்தது. அவர் முந்தைய நாள் சட்டமன்றத்தை தற்காலிகமாக’கலைத்து ஆணை மூலம் ஆட்சி செய்யும் திட்டத்தை அறிவித்தார்.இது, பெருவில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கை என்று காஸ்டிலோ கூறினார், ஆனால் இது எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அவரது துணை ஜனாதிபதி போலுவார்டே உட்பட மற்றவர்களால் சதிப்புரட்சி முயற்சி என்று பரவலாகக் கண்டனம் செய்யப்பட்டது.

இதனால், எதிர்க்கட்சித் தலைமையிலான சட்டமன்றம் காஸ்டிலோவை அகற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்தது. இதையடுத்து, துணை ஜனாதிபதி டினா பொலுவார்டேவை பொறுப்பேற்க காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.

இதற்கமைய அவர் தென் அமெரிக்க தேசத்தை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையுடன் ஜனாதிபதியானார். அவர் 2026ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருப்பார்.நெருக்கடியை சமாளிக்க அரசியல் தீர்வுக்கு அழைப்பு விடுத்த பொலூர்டே, அனைத்து அரசியல் கட்சிளையும் உள்ளடக்கிய புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என உறுதியளித்தார்.‘ஒரு சதி முயற்சி நடந்துள்ளது என்றும் அது நிறுவனங்களிலோ அல்லது தெருவிலோ எதிரொலியைக் காணவில்லை’ என்றும் அவர் பதவியேற்ற பிறகு கூறினார்.