'எவ்வாறு உங்களை ஏற்றுக்கொள்ள முடியும்... " மாநாட்டில் பாகிஸ்தானை மறைமுகமாக சாடிய மோடி


ஷாங்காய் உச்சி மாநாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானின் நடவடிக்கைகளை மறைமுகமாக விமர்சித்தது பேசுபொருளாகியுள்ளது.

சீனாவின் டியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, எஸ்.சி.ஓ. என்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கு, ஆங்கிலத்தில் security> connectivity  மற்றும்  opportunity  அதாவது பாதுகாப்பு, இணைப்பு மற்றும் வாய்ப்பு எனக் குறிப்பிட்டு உரையாற்றினார்.

அதில், 40ஆண்டுகளாக பயங்கரவாதத்தால் இந்தியா மிகப்பெரிய பாதிப்புகளை சந்தித்து வருவதாகவும் பிரதமர் மோடிகுறிப்பிட்டார்.

பஹல்காம் தாக்குதலைதனது பேச்சில் சுட்டிக்காட்டிய பிரதமர்மோடி, பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் நாடுகளை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.

பயங்கரவாதத்தின் விடயத்தில் இரட்டை நிலைப்பாடுக் கூடாது என்பதை நாம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டுமெனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் முன்னிலையில், பிரதமர் மோடி இவ்வாறு பேசியது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

முன்னதாக மாநாட்டில் கருத்து வெளியிட்ட ரஷ்ய ஜனாதிபதி புடின், உக்ரேன் மோதலுக்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என வெளிப்படையாக குற்றம்சாட்டினார். பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்தும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் முயற்சிகளையும் புடின் பாராட்டியிருந்தார்.