கண்டியின் பிரபல வர்த்தகரின் விபரீத முடிவு


பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளரான கண்டியின் பிரபல வர்த்தகர் ஒருவர் இன்று திகனவில் உள்ள தனது அலுவலக அறையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கண்டி பல்லேகல பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகரான மங்கள குணவர்தன என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மக்கள் மத்தியில் அவர் திகன மங்கள என்று அழைக்கப்படுகிறார்.

கார் விற்பனை நிலையம் மற்றும் அடமான நிலையம் ஒன்றின் உரிமையாளரான இந்த வர்த்தகர், கடன் வழங்கும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.