சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபாநாயகரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள விசேட அதிரடிப்படடையினருக்கு மேலதிகமாக மேலும் விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
சபாநாயகரின் வீடு மற்றும் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவற்றுக்கு மேலதிக சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினருக்கு மேலதிகமாக பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் கூறுகின்றன.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            