இஸ்ரேலில் 20 இலங்கையர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி : முற்றுமுழுதாக தீக்கிரையான பஸ்


இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக வழக்கமாக இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளது.

இஸ்ரேலின் முசைலயவ ஆயடயமாi பிரதேசத்திற்கு அருகே நேற்று (18) காலை விவசாய நடவடிக்கைகளுக்காக சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 20 இலங்கையர்கள் பயணித்துள்ளனர்.

தீப்பிடித்த பிறகு பேருந்தின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால், அவர்கள் அனைவரும் ஜன்னல்களை உடைத்து வெளியேறியுள்ளனர்.

விபத்தில் ஒருவரது காலில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், எனினும் அவரது நிலைமை மோசமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான போதிலும், காயமடைந்த இளைஞனின் நிலைமை மோசமாக இல்லை என நிமல் பண்டார குறிப்பிட்டார்.

மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனமும் அவர்களின் செயல்பாடுகளை அவதானித்து வருவதாகவும், ஏனைய தரப்பினர் வழமை போன்று தங்களது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.