சுற்றுலா பேருந்தை ஓட்டிச் சென்ற பாடசாலை மாணவன்!


நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்ற பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவர், பேருந்து ஒன்றை செலுத்திய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பாடசாலை சுற்றுலா ஒன்றிற்காக சென்ற போதே குறித்த மாணவன், இந்த பேருந்தை செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், தென் மாகாணத்திலிருந்து நுவரெலியாவிற்கு சென்ற போதே அவர் இந்த பேருந்தை, செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.