தமிழரசுக்கட்சியை திட்டித்தீர்ப்பவருக்குத்தான் மேயர் பதவி!!


 

யாழ் மாநகரசபையில் போட்டியிடும் ஒரு ஊடகவியலாளருக்குத்தான் மேயர் பதவி வழங்கவேண்டும் என்று தமிழரசுக்கட்சியின் சில சிரேஷ்ட தலைவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டுநிற்கின்றார்களாம்.

இத்தனைக்கும் குறிப்பிட்ட அந்த ஊடகவியலாளர் கடந்த சில வருடங்களாக தனது ஊடகத்தில் தமிழரசுக்கட்சியை திட்டித்தீர்த்துக்கொண்டிருந்தார்.

கட்சித் தலைவர் மாவையை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு சேதப்படுத்தியிருந்தார்.

இருந்தபோதிலும் அவருக்கு இம்முறை போட்டியிட வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், அவரை மேயராக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றதாம்.

“தமிழரசுக் கட்சியை எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் திட்டித் தீர்க்கலாம், கட்சியில் எவரை வேண்டுமானாலும் கழுவிக் கழுவி ஊத்தலாம். ஆனால் கட்சியின் ‘முந்திரிக்கொட்டை’ என்று அழைக்கப்படுகின்றவருடன் மாத்திரம் உறவைப் பேணினால் போதும். எந்தப் பதவிக்குவேண்டுமானாலும் போகலாம்..” என்று வளமைபோலவே பின்னால் பேசுகின்ற வட்டாரங்கள் குசுகுசுத்துக்கொள்கின்றார்கள்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், அந்த ஊடகவியலாளரே மேயராகவேண்டும் என்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரொருவரும் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறாராம்.

கடந்த சில மாதங்கள் வரை அந்த ஊடகவியலாளரை திட்டிக்கொண்டு திரிந்த ஞானம் நிறைந்த சிவ பக்தரான அந்த சிரேஷ்ட உறுப்பினர், திடீரென்று பல்டி அடிக்கக் காரணம் என்னவாக இருக்கும் என்று கட்சிக்காரர்கள் யோசித்துக்கொண்டிருந்தபோது, இளைஞர் அணி முக்கியஸ்தர் ஒரு விடயத்தைக் கூறினாராம்.

“..வேறென்ன.. ஐயாதான் அடுத்த வடமாகண முதல்வர் என்று ஊடகவியலாளர் அவுழ்த்துவிட்டிருப்பார். ஐயாவும் பப்பாவில ஏறி நின்று கூத்துக்காட்டுறார்..”

(பேந்தென்ன.. மாவைக்கு ஆப்படிக்கிறதில எல்லாரும் ஒன்றாகிவிட்டார்கள் என்று சொல்லுங்கோ..)