மஹிந்தவை திடீரென சந்தித்த பெருமளவிலான சீனர்கள் : கட்சிக்குள் போதை கடத்தல்காரர்களுடன் தொடர்புடையவர்களுக்கு ஆப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தங்காலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (16) சீன தேயிலை வர்த்தகர்கள் குழு சந்தித்து பரிசுகளை வழங்கி அவரது நலனை விசாரித்தது.

 கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்ச தங்காலை கார்லடன் இல்லத்திற்கு சென்ற பின்னர் சீன வர்த்தகர்கள் மேற்கொண்ட முதல் வருகை இதுவாகும்.

இந்த குழு வெலிகம மற்றும் நுவரெலியாவுக்கும் தமது விஜயத்தை மேற்கொண்டது.

முன்னதாக கொழும்பிலுள்ள சீன தூதுவரும் மகிந்தவை சென்று சந்தித்திருந்தார்.

இதேவேளை தங்காலைக்கு சென்றுள்ள மகிந்த ராஜபக்சவை பல்வேறு தரப்பினரும் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதேநேரம் இனிவரும் தேர்தல்களின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர்களிடம் அவர்கள் போதைப் பொருள்மற்றும் குற்றக்கும்பல்களுடன் தொடர்பு கிடையாது என்பதனை உறுதி செய்ய பொலிஸ் அறிக்கையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கும் என்று அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமன தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப் பொன்றின் போதே இதனைத் தெரிவத்த அவர்,

கொள்கைத் திட்டங்களை ஏற்றுக்கொள்ளும் நாட்டை நேசிக்கும் புதிய இளைஞர்கள் எங்களுடன் இணைந்துகொண்டுள்ளனர்.

இதற்கமைய இளைஞர்களின் பிரதிநிதித்துவத்துடன் இளைஞர்களின் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. நேர்மையாக எதிர்கால சந்ததியினரின் தேவைகளை புரிந்துகொண்ட இளைஞர்கள்எமது இளைஞர் அணியில் இருக்கின்றனர்.

இதேவேளை மாகாண சபைகளுக்கானதேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் கட்சியென்ற ரீதியில் எதிர்வரும் தேர்தல்களில்வேட்பு மனுக்களை கோரும் போது இம்முறை கட்டாயமாக போதைப் பொருள் மற்றும் ஒருங்கிணைந்த குற்றக்கும்பல்களுடன் தொடர்பில்லை என்ற பொலிஸ் அறிக்கையினை பெற்றுக்கொள்வோம் என்றார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் இஷாரா செவ்வந்தி குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

தான் காதலித்தது செவ்வந்தியை அல்ல,மாறாக லிமினி என்பவரை தான், எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன பாதாள உலகில் தொடர்புடையவர்களை பொலிஸார் விசாரிக்க வேண்டும். அது பொலிஸாரின் பொறுப்பு. ஆனால் பாதாள உலகில் தொடர்புடையவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதையும் பொலிஸார் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

ஒரு குழு திருடர்களுக்காக பதினேழு கடவுச்சீட்டுக்களை உருவாக்கி நாட்டை விட்டு வெளியேற்றியதாக பொலிஸ்துறைக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் கூறினார்.

 
இந்த தகவலை காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சருக்கு கொடுத்தது யார்? இதை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டிய பொறுப்பு பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சருக்கு உள்ளது.

வெளியேறிய மக்களில் பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்திருக்க வேண்டும்.

எனவே, பொலிஸ்துறைக்கு பொறுப்பான பிரதிஅமைச்சர் இதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், 323 கொள்கலன் தப்பியதுபோலவே பாதாள உலகத்தைச் சேர்ந்த ஒருகுழுவும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றதாஎன்ற கேள்வி இந்த நேரத்தில் எழுகிறது.

அரசாங்கத்தில் சிலர் "நீதிமன்ற உத்தரவுகளை ஏன் ஏற்க வேண்டும்?' என்று சொல்லும் நிலையை அடைந்துவிட்டனர்.

இதிலிருந்து அமைப்பு மாற்றம் சிறப்பாகசெய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.