பதுளை எல்ல - வெல்லவாய வீதியில் நேற்று இரவு (4) பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் இறுதியாக எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.
தங்காலை நகரசபை ஊழியர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பேருந்தில் 30 மேற்பட்டோர் இருந்த நிலையில் அவர்களில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விபத்து இடம்பெறுவதற்கு முன்னர் சுற்றுலா சென்ற குறித்த நபர்கள் எடுத்துக்கொண்ட புதைகப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
போட்டி மிகுந்த இந்த உலகில் எம்முடைய வாழ்க்கை நிலையானது அல்ல. எந்த நேரத்திலும் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்.. இருக்கும் வரை ஒருவருக்கொருவர் அன்புடன் செயற்படுவோம் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.