வடக்கு ஆளுநர் மக்களின் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றார் – சிவாஜிலிங்கம்

வடமாகாண ஆளுநர் மக்களின் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றரெனவும் இதனை என்னால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நிரூபிக்க முடியும் எனவும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறும் அவர் வடமாகாண ஆளுநருக்கு அழைப்பு விடுத்தார்.

யாழ். ஊடக மையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு 14 மெய்ப்பாதுகாவலர்களும் 6 சாரதிகளும் காணப்படுகின்றனர்.

இவர்களுக்காக பல இலட்சம் ரூபாக்கள் செலவிடப்படுகிறது. அத்துடன் ஆளுநர் தனது எரிபொருள் மற்றும் ரீசேட் கொள்வனவிற்காக பல இலட்சம் ருபாவை மக்களின் வரிப்பணத்தில் செலவிடுகின்றார்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் இதனை வெளிப்படுத்துவோம். அல்லது பகிரங்க விவாதத்திற்கு ஆளுநர் தயாரா? என கேள்வியெழுப்பினார்.

ஆளுநர் நிகழ்ச்சிகளுக்கு வருவதற்கு பெருமளவு பாதுகாப்பு கெடுபிடிகள் இடம்பெறுகின்றன. ஆளுநரின் உயிருக்கு ஆபத்து உள்ளதா என்றும் கேள்வியெழுப்பினார்.