விடுதலைப் புலிகளின் தலைவர் சுற்றிவளைப்பு! இந்தியாவில் இருந்து மகிந்தவுக்கு வந்த கட்டளை

இலங்கையின் இறுதி போர் களத்தில் புதுமாத்தளன் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை இராணுவம் சுற்றிவளைத்ததாகவும், அந்த சந்தர்ப்பத்தில் அன்றிருந்த இந்திய வெளியுறவுச் செயலார் சிவசங்கர் மேனன் பெரியதாக ஒன்றும் செய்ய வேண்டாம் என மகிந்த ராஜபக்சவுக்கு (Mahinda Rajapaksa) உத்தரவு வழங்கியதாகவும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தேர்தல் முடியும் வரை காத்திருக்குமாறு சிவசங்கர் மேனன் மகிந்தவுக்கு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அச்சந்தர்ப்பத்தில் நாங்களும் பார்த்துக் கொண்டிருந்தோம்.

தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிப் பெறும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.

ஏனென்றால், பாரதிய ஜனதா கட்சி விடுதலைப்புலிகளுக்கு சார்பானவர்கள் பேர்டினன்ட் மற்றும் இன்றிருக்கும் அண்ணாமலை போன்றோரும் உள்ளடங்குவர்.

மோடியும் அண்மையில் நம்நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட பின்னர் அகண்ட பாரத்தத்தின் ஒரு பகுதி என்று தெரிவித்திருந்தார்.

இதில் பாரிய மறைமுக அரசியல் அரங்கங்கள் செயற்படுகின்றன.

நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுக் கொண்டு செல்லுகையில்,சிவசங்கர் மேனனும், முடித்துக் கொள்ளுங்கள் என எங்களுக்கு கட்டளை வழங்கினார்” என தெரிவித்துள்ளார்.