க.பொ.த உயர்தரப் பரீட்சையில் முதலாம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாணவ மாணவிகள்

2022ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு - மல்லாவி மத்திய கல்லூரியை  சேர்ந்த மாணவன் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

மல்லாவி மத்திய கல்லூரியை சேர்ந்த விஜயகுமார் மிதுசன் உயிரியல் பிரிவில் 3ஏ சித்தியினை பெற்றுள்ளார். 

அதேவேளை தேசிய மட்டத்தில் 446 வது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2022ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட மாணவி தேனுஜா மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

சித்தியடைந்த மாணவி முல்லைத்தீவு உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் கலை பிரிவில் தமிழ் , புவியியல் , சமூக விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் 3ஏ சித்திகளை பெற்றுள்ளார்.

அதேவேளை தேசிய மட்டத்தில் 283 வது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்படத்தக்கது.

2022ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த மாணவன் விஜிதரன் ஜதிவர்மன் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

சித்தியடைந்த மாணவன் முல்லைத்தீவு கணித பிரிவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் விஜிதரன் ஜதிவர்மன் 2ஏ சித்திகளை பெற்றள்ளார்.

அதேவேளை தேசிய ரீதியில் 1473 ஆவது இடத்தையும் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தனது விருப்பப்படி கணித பிரிவில் கல்வி கற்று மாவட்டத்தில் முதல்நிலை பெற்றுள்ளதாகவும் இந்த நிலையை அடைய வழிகாட்டிய பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் என ஜதிவர்மன் தெரிவித்துள்ளார்.