முத்து நகர் விவசாயிகளின் போராட்டத்தில் நடந்தது என்ன? - ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
இந்த நிலையில் பிரதான வாயிலை மறித்து போராடிய போது அங்கு பொலிஸார் விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக 1990 சுவசரிய வண்டி ஊடாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது முத்துநகர் காணிப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமக்கு நியாயம் வழங்க வலியுறுத்தி திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்னால் மேற்கொண்ட அமைதி போராட்டத்தில் அவர்கள் மீது பொலிசார் மேற்கொண்ட தாக்குதல் கண்டிக்கதக்கது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
மேலும் தாம் ஆட்சிக்கு வந்தவுடன் முத்துநகர் காணிப்பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருவோம் என கூறிய இந்த அரசாங்கம் தற்போது அந்த விவசாயிகளை எதிர்கொள்ள முடியாமல் பொலிசாரை கொண்டு அவர்களை விரட்டுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.