செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியில் நேற்றுவரை 111 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மனித எலும்புக்கூடுகளின் ஸ்கான் பரிசோதனைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கவில்லை.
இதனால் ஸ்ரீ ஜெயவர்த்தனபுரப் பல்கலையின் தொழில்நுட்பப் பிரிவின் உதவியோடு எதிர்வரும் திங்கட்கிழமை ஸ்கான் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது என்று சட்டத்தரணி ரணித்தா தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்ட 9ஆவது அகழ்வில் நேற்றைய அகழ்வில் 7 எலும்புக்கூடுகள் பிரதேசம் 1இலும் பிரதேசம் 2 இலும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்றைய அகழ்வில் முழுமையாக 3 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றில் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் சுவிஸ் தூதரகத்தின் பிரதிநிதிகள் சித்துப்பாத்திக்கு வந்து கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் அகழ்வுப் பணியைப் பார்வையிட்டனர்.
அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் ஒரு பகுதியின் ஸ்கான் பரிசோதனைக்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்காத நிலையில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுரப் பல்கலையின் தொழில்நுட்பப் பிரிவின் உதவியோடு எதிர்வரும் திங்கட்கிழமை ஸ்கான் பரிசோதனை முன்னெடுக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. - என்றார்.