கொழும்பில் அதிவேகமாக பயணித்த கார்..! : இறுதியில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி


சாரதியினால் கைவிட்டுச் செல்லப்பட்ட கார் ஒன்றிலிருந்து 4 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 4 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொகை போதைப்பொருள் நான்கு பெட்டிகளில் அடைக்கப்பட்டு அந்த காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரையோர பொலிஸார் கொழும்பு - கொட்டாஞ்சேனையில் நேற்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, குறித்த பகுதியில் அதிக வேகத்தில் பயணித்த காரை ஒன்றை நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.

இருப்பினும், குறித்த காரான நிறுத்தப்படாமல் தொடர்ந்து பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்