சுற்றுலா சென்ற குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..! இரண்டு வயது குழந்தை பரிதாபமாக பலி

காலி  - பெந்தோட்டை பகுதியில் 2 வயதும் 2 மாதங்களான குழந்தை ஒன்று ஹோட்டலில் உள்ள நீச்சல்தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (10 ) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கொழும்பு, திம்பிரிகஸ்யா பிரதேசத்தைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் குழுவொன்று சுற்றுலா சென்று பெந்தோட்டை பிரதேசத்திலுள்ள குறித்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளனர்.

இதன்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நிலையில், குழந்தை அறையில் இல்லாததால் தாயும் தந்தையும் தேடியுள்ள போது, 

ஹோட்டலில் உள்ள நீச்சல் தடாகத்தில் குறித்த குழந்தை இறந்து மிதந்த நிலையில் மீட்கப்பட்டு பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.