நாட்டில் உள்ள சீனக்குழுவினர், சீன தொழிலதிபர் ஒருவரைக் கடத்தி சுமார் 18 மில்லியன் ரூபாயை பறிமுதல் செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி இரவு 9 மணியளவில் கொள்ளுப்பிட்டி பகுதியில் காரில் பயணித்த ஒரு குழுவினரால் சீன தொழிலதிபர் கடத்தப்பட்டுள்ளார்.
குறித்த குழுவினர், சீன தொழிலதிபரைக் கடுமையாகத் தாக்கி, அவரது வங்கிக் கணக்கிலிருந்து பெருந்தொகையான பணத்தை இணையவழி மூலம் தங்களது வங்கிக் கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்துள்ளனர்.
அதன்பின்னர் சீன தொழிலதிபர், தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.