சஞ்சீவவை கொலை செய்த விதம்! செவ்வந்தியின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலங்கள்

நீதிமன்றத்தின் படிக்கட்டில் வைத்தே குற்றவியல் சட்டக்கோவை புத்தகத்தில் மறைத்துக் கொண்டு வந்த துப்பாக்கியை கமாண்டோ சமிந்துவுக்கு வழங்கியதாக  நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.

இஷாரா செவ்வந்தி உட்பட்ட குழுவினர் நேபாளத்திலிருந்து நேற்று மாலை கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர். 

இலங்கை விமானம் யு.எல். 182 விமானம்  நேபாளத்தின் காத்மண்டுவிலிருந்து நேற்று (15) மாலை 6.55 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இந்த குழுவினர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவில்  பாரப்படுத்தப்பட்ட இஷாரா பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிக்கும் போதே மேற்கண்வடாறு குறிப்பிட்டுள்ளார்.

செவ்வந்தி வழங்கிய வாக்குமூலத்தில்,  துப்பாக்கியதாரியான கமாண்டோ சமிந்து துப்பாக்கியை இடுப்பில் செருக்கிக் கொண்டு செவ்வந்தியுடன் நீதிமன்றத்திற்குள் சென்று சட்டத்தரணிகள் அமரும் இருக்கையில் அமர்ந்துள்ளார். 

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ குற்றவாளி கூண்டில் ஏறியபோது கமாண்டோ சமிந்து துப்பாக்கியை எடுத்து  சஞ்சீவவை நோக்கி பிரயோகித்துள்ளார். 

பின்னர் அவர்கள் இருவரும் சஞ்ஜீவ மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என்று  சத்தமிட்டவாறே  வெளியில்  ஓடிச் சென்றதாக தெரிவித்துள்ளார்.