30 ஆண்டுகளுக்கு பிறகு கருவில் இருந்து வெளிவந்த குழந்தை - உலகையே வியக்க வைத்த சம்பவம்


30 ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்த நிலையில் இருந்த ஒரு கருவில் இருந்து குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

அமெரிக்காவின் ஒஹியோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

1994ஆம் ஆண்டு உறைந்த நிலையில் வைக்கப்பட்ட ஒரு கருவில் இருந்து குழந்தை ஒன்று பிறந்துள்ளமை உலகில் ஒரு புதிய சாதனையாக பாரக்கப்படுகின்றது.

தாடியஸ் டேனியல் பியர்ஸ் என பெயரிடப்பட்டுள்ள குறித்த குழந்தை உலகின் மிக வயதான குழந்தை என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 26ஆம் திகதி, 30 ஆண்டுகளுக்கு முன்பு 62 வயதான நபர் ஒருவரிடம் இருந்து எடுக்கப்பட்ட கருவைப் பயன்படுத்தி இந்த குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐவிஎஃப் (ஐஏகு) சிகிச்சையில், கருத்தரித்த கருக்கள் உறைந்த நிலையில் பாதுகாத்து வைக்கப்பட்டு, பின்னர் கருத்தரிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்க மருத்துவ துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சாதனை சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.