‘குடு’ காரர்களே தற்போது காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர் – பிரசன்ன ரணதுங்க!

 

‘குடு’ காரர்களே தற்போது காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர் எனவே இவர்களை கட்டுப்படுத்துவதற்கு அவசரகால சட்டம் அவசியம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், காலி முகத்திடல் என்பது பொருளாதார கேந்திர நிலையம். சுற்றுலாத்துறையுடன் சம்பந்தப்பட்ட பகுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அங்கிருந்து போராட்டக்காரர்கள் அகற்றப்பட வேண்டும் எனவும், அவர்களுக்கு மாற்று இடங்களை வழங்கலாம் எனவும் அமைச்சர் யோசனை ஒன்றினையும் முன்வைத்துள்ளார்.

போராட்டக்காரர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள், படையினரை படுமோசமாக விமர்சித்தனர். படையினரைவிட பிரபாகரன் சிறந்தவர் என்றுகூட குறிப்பிட்டனர்.