பிரித்தானியாவுக்குள் ஊடுருவிய “ஜாம்பி மருந்து” நிபுணர்கள் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

ஜாம்பி மருந்து (zombie drug) அல்லது ட்ராங்க்(Tranq) என்று அழைக்கப்படும் கால்நடை மயக்க மருத்து பிரித்தானியாவுக்குள் நுழைந்து இருப்பதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 
அமெரிக்க நகரங்களில் பெரும் தொல்லை கொடுத்த சட்டவிரோதமான மற்றும் சக்தி வாய்ந்த கால்நடை மயக்க மருந்தான சைலாசின் Xylazine, பிரித்தானிய நகரங்களிலும் நுழைந்து இருப்பதாக அறிக்கைகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளன.

இந்த சட்டவிரோதமான மருந்தை பயன்படுத்தியவர்களுக்கு ஏற்பட்ட விளைவுகளை கொண்டு இந்த சைலாசின் Xylazine மருந்து ஜாம்பி மருந்து (zombie drug) அல்லது ட்ராங்க்(Tranq) என்று அழைக்கப்படுகிறது.

இதன் தீவிர தன்மை கருதி “நாட்டின் வளர்ந்து வரும் ஆபத்து” என்று  வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்து இருந்தது.

 
இந்த மருந்து பெரும்பாலும் heroin அல்லது fentanyl போன்ற போதைப் பொருட்களுடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது, இது கணிக்க முடியாத மற்றும் மிகவும் ஆபத்தான கலவையை உருவாக்குகிறது.


இதனால், இந்த ஆபத்தான விளைவுகளுக்கு ஆளாகும் மக்கள் தொகை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

 சைலாசின் பயன்படுத்தியவர் மயக்கத்தில் இருந்து மீண்டெழுந்த பிறகு கூட, சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். இது தீவிர உடல்நல பிரச்சனைகள் மற்றும் இறப்புக்கும் வழிவகுக்கும்.

  சைலாசின் பயன்படுத்துவதால் தோலில் புண் ஏற்பட்டு, அவை தொற்றுவதற்கும், கை, கால்கள் பாதிக்கப்பட்டு அவற்றை நீக்க வேண்டிய நிலைக்கும் வழிவகுக்கும்.