பொதுஜன பெரமுன என்னை வேட்பாளராக அறிவிக்கும் வரை காத்திருக்கின்றேன் என்கிறார் தம்மிக பெரேரா


 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை களமிறக்குவதற்கு அந்த கட்சி தீர்மானிக்குமானால், தான் அதற்கு தயாராகவே இருப்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக பெரேரா, பொதுஜன பெரமுனவின் அறிவிப்பிற்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க செயற்பாட்டாளர்களின் மத்திய நிலையம் இன்று கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது.

 
கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக பெரேரா ஆகியோர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,
 

தற்போது நாட்டிலுள்ள 40 சதவீதமான பிஜைகள் யாருக்கு வாக்களிப்பது என்று இன்னும் தீர்மானிக்காமல் உள்ளனர். ஒவ்வொருவரும் மேடைகளில் பெருமிதமாகப் பேசிக் கொண்டிருந்தாலும், அவர்கள் பொருளாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பதைக் கூறவில்லை.

நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டிய தயாராக உள்ளேன். ஆனால் இலங்கையிலுள்ள பாரிய அரசியல் கட்சியான பொதுஜன பெரமுன யாரை வேட்பாளராகக் களமிறக்குவது என்பதை தீர்மானிக்க வேண்டும். நான் அதனையே பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைத்திட்டங்களையும் நான் முன்னெடுத்து வருகின்றேன். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக நான் மேடையேறினால், பொருளாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என்பதைக் கூற வேண்டியேற்படும். அதற்கான வேலைத்திட்டங்களையே நான் முன்னெடுத்துள்ளேன்.

எனவே தகுதியான வேட்பாளரை களமிறக்குவது பொதுஜன பெரமுனவின் பொறுப்பாகும்.
 
சில அரசியல் கட்சிகள் இரண்டு ஆண்டுகளாக பிரசாரங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் யாருக்கும் பொருளாதாரத்தை எவ்வாறு மறுசீரமைப்பது என்பது தெரியவில்லை.
 
எமக்கு இன்னும் 90 நாட்களே உள்ளன. அந்த காலப்பகுதிக்குள் பொருளாதார வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்றார்.