கணவனின் லொட்டரி பணத்துடன் காதலனுடன் மனைவி தப்பியோட்டம்

கணவனுக்கு அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் கிடைத்த ஆறு கோடி ரூபா பணத்தை சுருட்டிக்கொண்டு மனைவி தனது காதலனுடன் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் இசான் மாகாணத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் வசிக்கும் மணித் (Manit,49),என்பவர் நவம்பர் 1 ஆம் திகதி 6 மில்லியன் பாட் மதிப்புள்ள லொட்டரியை வென்றார். வரி விலக்குக்குப் பின்னர் அவர் தனது வங்கிக் கணக்கில் 5,970,000 பாட்களைப் பெற்றார். இது இலங்கை பணமதிப்பில் சுமார் 6 கோடி ரூபாய் ஆகும்.

பின்னர் மனைவியை  நம்பி, வெற்றிபெற்ற தொகையை மனைவியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார். ஆனால், அவரது 45 வயது மனைவி அங்கனரத் (Angkanarat) எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு காதலனுடன் தப்பி ஓடிவிட்டார்.

திருமணமாகி 26 வருடங்கள் கடந்த நிலையில் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தம்பதியிடையே தகராறு எதுவும் இல்லை என அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தெரிவித்தனர்.

உறவினர் போல் வந்த காதலன் லொட்டரி வென்ற மகிழ்ச்சியின் அடையாளமாக அவர்கள் ஒரு கோவிலுக்கு 1 மில்லியன் பாட் நன்கொடை அளித்தனர். இவ்விழாவில் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். அப்போது, அவர் தனது மனைவியின் உறவினர் என்று ஒரு அந்நியரை விழாவில் சந்தித்ததாக மணித் கூறுகிறார்.

ஆனால் அவர் தனது மனைவியின் காதலன் என்பதையும், அவருடன் தான் தனது மனைவி பணத்துடன் தப்பிச் சென்றுள்ளார் என்பதையும் பின்னர் அவர் உணர்ந்தார். மனைவியிடம் இருந்து இப்படி ஒரு ஏமாற்றத்தை எதிர்பார்க்காத அவர், மனைவி மற்றும் பணம் இரண்டையும் பறிகொடுத்த சோகத்தில் உள்ளார்.