யாழ்.பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்களுக்கு வகுப்புத்தடை

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்தவர்களுடன் குழப்பத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் உட்பட நான்கு மாணவர்களுக்கே இவ்வாறு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு அங்கமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கிலும் திரைப்பட திரையிடல்கள் நடைபெறுகின்றன.

சர்வதேச திரைப்பட விழாவுக்கு வருகை தந்தவர்களால் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமையவே அவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது