கொழும்பு நீதவான் நீதிமன்றின் 5 ஆம் இலக்க அறையில் வைத்து கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்வதற்கு மோட்டார்சைக்கிளை வழங்கி உதவி ஒத்தாசை வழங்கிய தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிளை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கமைய சந்தேகநபரை 50 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் 25 இலட்சம் ரூபா சரிரீப்பிணைகளிலும் விடுவிக்க உத்தரவு பிறப்பித்த நீதவான், சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தினார்.
சம்பவம் தொடர்பில் 5 மாதங்களுக்கு மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் தனது பெருநரை பிணையில் விடுவிக்குமாறு சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி மார்வின் டி சில்வாவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதன் பின்னர் இதற்கான உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்தது.
இதற்கமைய கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட பிணை நிபந்தனைகள் சந்தேகநபருக்கு வாசித்து காட்டியதன் பின்னர் அவரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க உத்தரவு பிறப்பித்தார்.
புஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்