எதிர்காலத்தில் சுமந்திரன்(M.A.Sumanthiran) மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பை தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்வதற்கான நகர்வுகள் காணப்படுவதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் குயின்ரஸ் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியலிங்கத்தை தெரிவு செய்தமை பலருக்கு இங்கு அதிருப்தியை தோற்றுவித்துள்ளது
சத்தியலிங்கம் எப்போது, அந்த பதவியில் இருந்து விலகுகின்றாரோ அந்த சமயம் இரண்டாம் இடத்திலுள்ள சுமந்திரனுக்கு அது வாய்ப்பாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, சுமந்திரன் மீண்டும் நாடாளுமன்றம் செல்வதற்காக மேற்கொள்ளப்படும் மாற்று வியூகங்கள்தொடர்பிலும் அரசியல் ஆய்வாளர் இதன்போது தெளிவுபடுத்தினார்