முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம வீட்டுக்கு நேற்றையதினம் பல சிங்கள அரசியல்வாதிகள் உள்ளிட்ட குழுவினர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
மீண்டும் ராஜபக்சர்களின் விம்பத்தை கட்டியெழுப்ப திஸ்ஸ குட்டியாராச்சி உள்ளிட்ட தரப்பினர் குறித்த விஜயத்தில் கலந்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரத்தில் இருந்து இரண்டு மூன்று பேருந்துகளில் முன்னாள் ஜனாதிபதியை பார்ப்பதற்காக பரிசுபொருள்கள் மற்றும் உணவு பண்டங்களுடன் பலர் வருகை தந்துள்ளனர்.
இதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வீடு ஒன்றை வழங்குவதற்கு மகாநாயக்க தேரர்கள் முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் வரப்பிரசாத இழப்பால் அவருக்கான உத்தியோகபூர்வ வீடு இல்லாமல் போனமையினால், அவருக்கு வீடு ஒன்றை வழங்குவதற்கு தலையிடுவதாக மகாநாயக்க தேரர்கள் சிலர் தன்னிடம் தெரிவித்துள்ளதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்தவின் சலுகைகள் குறைக்கப்பட்டதற்கு எதிராக தற்போது சில பிக்குகளால் ஒரு போராட்டம் கட்டமைக்கப்படுகிறது" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது "நீங்கள் உங்கள் ஒரு மைல் தூரத்தைத் தொட்டால் கூட, மகா சங்கத்தினர் முன்வருவார்கள்" என்று சில பிக்குகள் பகிரங்கமாக இதன்போது அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த நாட்களில் மகிந்தவின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அவரைப் பார்க்க தொலைதூரப் பகுதிகளிலிருந்தும் மக்கள் வருவதாகக் கூறப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் முதல் பெண்மணிகளின் சலுகைகளை, வீடுகள் உட்பட, அவற்றை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தில் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.