இரகசிய விசாரணையில் சிக்கப்போகும் அரசியல்வாதிகள்: வெளியான தகவல்

மாகாண சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்த காலங்களில் காணாமல்போயுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வாகனங்களில் பலவற்றின் விபரங்களைக் கண்டுபிடிக்க முடியாது உள்ளதாகவும், சில வாகனங்கள் பகுதிகளாக விற்கப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றன.

இந்த வாகனங்கள் தொடர்பான தகவல்களைக் கண்டறிய அமைச்சக மட்டத்தில் ஒரு இரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

இரகசிய விசாரணையில் சிக்கப்போகும் அரசியல்வாதிகள்: வெளியான தகவல் | Thousands Of Vehicles Missing In Small Councils

இரகசிய விசாரணை

இந்த வாகனங்கள் அடையாளம் காணப்படும் பட்சத்தில் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றை வைத்திருப்பவர்கள் மீது சட்டம் கடுமையாக நடைமுறைபடுத்தப்படும் என்று அமைச்சகம் கூறுகின்றது.

கடந்த காலங்களில் உள்ளூராட்சி நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்கள் முறையான நடைமுறை இல்லாமல் பயன்படுத்தப்பட்டிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை,நிறுவனத் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களை, சில அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான சாதாரண ஊழியர்கள் பயன்படுத்திய சம்பவங்களும் அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.