போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி வாகனப் பதிவுகளை எளிதாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் சிலர் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போலி ஆவணங்களை பயன்படுத்தி, பதிவு செய்யப்பட்ட 8 வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் அடுத்து, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைய, வாரங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சுங்க அனுமதியைத் தவிர்த்து வாகனங்கள் இறக்குமதிசெய்யப்பட்டு பின்னர், பழையவாகனங்களின் செசி எண்களைப் பயன்படுத்தி குறித்த வாகனங்கள்பதிவு செய்யப்பட்டதாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சட்டவிரோத செயற்பாடு,சில மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதனடிப்படையில், நீதிமன்றஉத்தரவின் கீழ், மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் சிலரிடமிருந்து ஏற்கனவே வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.