உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் இலங்கைக்கு வருகை தருவதற்கு பிள்ளையானின் முன்னாள் சகாவான அசாத் மௌலான சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சிக்கு பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தியுள்ள பிள்ளையானின் மிக நெருங்கிய சகாவாக செயற்பட் அசாத் மௌலான இலங்கைக்கு வந்து அது தொடர்பிலான சாட்சியங்களை வழங்க பச்சைக் கொடி காட்டியுள்ளார்.
சனல் 4 தொழலக்காட்சிக்க தெரிவித்த விடயங்களை அவர், குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு ஒப்புதல் வாக்குமூலமாக வழங்க முன்வந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அவ்வாறு வாக்குமூலம் வழங்குவதற்கு அசாத் மௌலான சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவரது பாதுகாப்பு தொடர்பானதாக அந்த நிபந்தனைகள் அமைந்துள்ளதாகவம் அறிய முடிகின்றது.
குறித்த நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அசாத் மௌலானா விரைவில் இலங்கைக்கு வந்து வாக்குமூலம் வழங்குவதற்கு தயாராகவுள்ளதாகவம் அசாத் மௌலான விதித்துள்ள நிபந்தனைகளில் ஏற்றுக்கொள்ளத்தக்கவை எவை என்பது குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆராய்ந்து வருவதாகவும் தெரியவருகின்றது.