இந்தோனேசியாவில் இன்று அதிகாலை பாரிய நில நடுக்கம் - சுனாமி எச்சரிக்கை ...!

இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேற்கு இந்தோனேசியாவில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், கடுமையான பொருட்சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 48 கிலோமீட்டர் (30 மைல்) ஆழத்தில் ஆச்சே மாகாணத்தின் கடலோர மாவட்டமான சிங்கில் இருந்து தென்கிழக்கே 48 கிலோமீட்டர் (30 மைல்) மையமாக இருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருந்தபோதும் இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் மையத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பரந்த தீவுக்கூட்டமான இந்தோனேசியா, பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான "ரிங் ஒப் பயர்" மீது இருப்பது காரணமாக அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.