காசா போர் நிறுத்த திட்டத்திற்கு ட்ரம்பும், நெதன்யாகுவும் இணக்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் காசாவிற்கான புதிய அமைதித் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். ​

​அதை ஹமாஸூம் ஏற்றுக்கொள்ளுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ​

​இந்தத் திட்டம் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முன்மொழிகிறது. ​

​ஹமாஸினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள உயிருடன் உள்ள 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்ததாக கூறப்படும் பலரது எச்சங்களையும் 72 மணி நேரத்திற்குள் விடுவிக்கப்படுமானால், இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான காசா மக்கள் விடுவிக்கப்படுவார்கள் என நம்பப்படுகிறது. ​

​போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளின் போது ஹமாஸூக்கு வெள்ளை மாளிகையின் 20-அம்ச திட்டம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ​

​காசாவை நிர்வகிப்பதில் ஹமாஸுக்கு எந்தப் பங்கும் இருக்காது என்றும் அதில் கூறப்பட்டுள்ள நிலையில் பாலஸ்தீன அரசுக்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.